உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு! ஐக்கிய ஜனதாதளம் புறக்கணிப்பு;
அடுத்த மாதம் நம் இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான்.
ஏனென்றால் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் காணப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகள் உள்ளன. இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக தனது கூட்டணிகளை அறிவித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் அப்னாதளம், நிஷாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி போட்டியிடும் என ஜே.பி. நட்டா தகவல் அளித்துள்ளார். உத்தரபிரதேச தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் ஆட்சி நடக்கும் நிலையில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளிடையே கூட்டணி இல்லை என்பது தெரிகிறது.
