ஆன்லைன் ரம்மி சட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியபோது திறனற்ற திமுக அரசு காரணமாக எட்டு உயிர்கள் பலியாகி உள்ளது என்றும் அந்த எட்டு உயிர் பலிக்கும் திமுக தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியிருப்பதாவது:
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார்.
அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது.
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது.
இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும் தமிழக முதல்வருமே பொறுப்பு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.