திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!!

இந்திய தேர்தல் களம் ஆனது சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் புதுப்புது திட்டத்தினை அமல்படுத்தி மக்களிடையே ஆதரவு பெறுகின்றனர்.

மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்த திரிபுரா தேர்தலில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முதல்வர் மாணிக் ஷா போர்டுவாலி தொகுதியிலும், ஒன்றிய அமைச்சர் பிரதிமா பூமி தன்பூரிலும் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதே வேளையில் காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திரிபுரா சட்டப்பேரவையில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மீதமுள்ள வேட்பாளர் பட்டியலை பாஜக காங்கிரஸ் கட்சியினர் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சட்டமன்றத் தேர்தல் ஆனது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.