மணிமேகலையின் பிறந்தநாளுக்கு காதர் கொடுத்த சர்ப்ரைஸ்! இதோ வீடியோ!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையினைத் துவக்கிய மணிமேகலை 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில்  ரொம்பவும் பிரபலம். தனது பேச்சுத் திறமையால் சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ்ஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் இன்னும் கூடுதலான ரசிகர்களையே பெற்றார்.

e1cc60afc6713e8e0c41e5c285d92c96

குக்கு வித் கோமாளியில் இவர் செய்யும் குறும்புகளுக்கு குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் அடிமைகள் என்றே சொல்லலாம். இவர் 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதிக்காததால் காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காதரின் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற அவர் அங்குள்ள கிராமத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

இதனால் அந்த கிராமத்திலேயே இவர்கள் பொழுது போக்கி வருகின்றனர். இந்தநிலையில்  இன்று அவரது 30 வது பிறந்தநாளை ஒட்டி மணிமேகலைக்கு அவரது கணவர் காதர் சிம்பிளாக ஆனால் அற்புதமான சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதுடன், “இந்த பர்த்டே ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...