Entertainment
கட்டா ஜ்வாலா பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நாயகனாக ஜொலிக்கிறார். இவரின் முண்டாசுப்பட்டி, ராட்சஷன் போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பிரேக்கை கொடுத்தது உண்மை.

சில மாதங்களுக்கு இவர் தனது மனைவியை விவகாரத்து செய்தார். பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜ்வாலா கட்டாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் தங்களது ப்ரெண்ட்ஷிப் புகைப்படங்களை வெளியிட்டனர்.
நேற்று ஜ்வாலா கட்டாவின் பிறந்த நாளையொட்டி ஜ்வாலா கட்டாவுடன் பிறந்த நாள் விழாவை விஷ்ணு விஷால் கொண்டாடினார்.
