கர்ப்பமாக இருக்கும் ஆலியாவுக்கு குழந்தை பிறந்தாச்சு….. என்ன குழந்தை தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே சீரியலில் நடிக்கும் போதே கர்ப்பம் ஆனதால் அந்த சீரியல் முடிக்கப்பட்டது.

இதனிடையே இவர்களுக்கு தற்போது ஐலா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறகு ஆலியா மானசா ராஜா ராணி2 தொடரில் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாகி இருந்தார். இருப்பினும் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் இத்தொடரில் நிறைமாத  கர்பிணியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் பிரசவம் நெருங்கும் காலம் என்பதால் இத்தொடரில் இருந்து விலகினார்.
சமீபத்தில் ஆலியா மானசாவின் வளைகாப்பு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் குழந்தையை சஞ்சீவ் தனது கையில் வாங்கும் புகைப்படத்தை ஆலியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

aalya manasa

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment