விமானம் மீது போர்தொடுத்த பறவை கூட்டம்! நடுவானில் நிகழ்ந்த சம்பவம்!!

பறவையை பார்த்துதான் மனிதர்கள் விமானத்தை படைத்தார்கள். அதனால் தானோ என்னவோ அந்த பறவைகளுக்கு விமானத்தை பிடிக்கவில்லை போலும். அடிக்கடி வானில் பறக்கும் விமானங்கள் மீது மோதி வருகின்றன. பொதுவாக விமானம் மீது ஒன்று அல்லது இரண்டு பறவைகள் மோதியதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு பறவை கூட்டமே மோதியுள்ளது.

ஒரு பறவை விமானத்தின் மீது மோதினாலே அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதிலும் பறவைகள் எஞ்சினுக்குள் சிக்கிக் கொண்டால் எஞ்சின் செயல் இழந்து பெரும் விபத்து ஏற்படலாம். அதனால் பயணிகளின் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இத்தாலியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் மீது திடீரென பறவைகள் கூட்டம் மோதியது. இதனையடுத்து விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்ததோடு, பறவைகள் மோதியதால், விமானத்தின் கண்ணாடியில் ரத்தத் துளிகள் சிறகுகளும் காணப்பட்டன. இதன் காரணமாக விமானியால் வெளியில் பார்க்க முடியாமல் போனது.

இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹெரான் என அழைக்கப்படும் பறவையினம் கூட்டமாக வந்து விமானத்தில் மோதியதில் விமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பறவைகள் என்ஜினில் நுழைந்ததால் தீ பிடித்து பற்றி எரிய தொடங்கியது.

அடேய் உங்களால வெள்ளத்துக்கு உண்டான மரியாதையே போச்சுடா..!

இருப்பினும் ஓடுபாதையை அடைவதற்கு சற்று முன்பு தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், விமானி மிகவும் திறமையாக பிரச்சனையை கையாண்டு பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். மேலும் அதில் இருந்த பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அந்த விமானியை அனைவரும் பாராட்டினார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment