மூன்று மாவட்டங்களில் விறுவிறுப்பாக பறவைகள் கணக்கெடுப்பு!!

தற்போது கால நிலையானது மெல்ல மெல்ல குளிர்காலம் மறைந்து கோடை காலத்திற்குள் செல்ல உள்ளது. இதனால் பல இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேலையில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்ற அச்சமும் மக்களிடையே மெல்ல மெல்ல தோன்ற உள்ளது. இருப்பினும் கூட ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் இந்த காலநிலை மாற்றமானது மனிதர்களை மட்டும் இன்றி பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

இதனால் தமிழகத்திற்கு வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கையானது அவ்வப்போது கணக்கெடுக்கப்படும். அந்த வகையில் தற்போது குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கறைகள், துணையாறுகள், பாசன குளங்களில் வாழும் உள்நாட்டு, வெளிநாட்டு உள்ளிட்ட அனைத்து பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வன பாதுகாப்பு மையம் உட்பட அமைப்புகள் பங்கேற்று உள்ளதாகவும் தெரிகிறது. நெல்லை உட்பட மூன்று மாவட்டங்களில் 60 குளங்கள், 5 நீர்த்தேக்கங்களில் ஏழு குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.