விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்! டெல்லியில் ஒன்றுதிரண்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!!

மத்திய அரசாக உள்ள பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி:

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக காணப்படுவது காங்கிரஸ் கட்சி. அதில் மூத்த உறுப்பினரான ராகுல் காந்தி ஒன்றிய அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்தனர்.

அதன்படி நாடாளுமன்றத்தில் விவாதம் நடை பெறுவதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறினார். எதிர்க்கட்சிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்க பார்க்கிறது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் ஏன் வருவதில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியினரை ஒன்றிய அரசு கேள்வி கேட்பதை விடுவதில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

விவாதமின்றி அடுத்தடுத்து மசோதாக்கள் நிறைவேற்ற படுகின்றன என்றும் ராகுல் காந்தி கூறினார். ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது ஒன்றிய அரசு என்றும் ராகுல் காந்தி கூறினார்.

திருச்சி சிவா:

விவாதமே இல்லாமல் மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதாக திருச்சி சிவா குற்றச்சாட்டை வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் விதிகளை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்றும் திருச்சி சிவா கூறினார்.

அவை நிகழ்ச்சிகள் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று திருச்சி சிவா கூறினார். ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது இன்றும் திருச்சி சிவா கூறினார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களை நாங்கள் கைவிட்டுவிட முடியாது என்றும் திருச்சி சிவா கூறினார், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக விரோதம் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment