Connect with us

நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கு: 11 பேர் விடுதலைக்கு எதிராக மனுதாக்கல்!!

sc2 1661236749

செய்திகள்

நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கு: 11 பேர் விடுதலைக்கு எதிராக மனுதாக்கல்!!

குஜராத்தை உலுக்கிய பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு குஜராத் கலவரம் வெடித்தப்போது பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில் 20 வயதான பானு கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதோடு 3 வயது குழந்தைகள் உட்பட 7 பேரை கொலை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கின் குற்றச்சாட்டுகள் நிருபனமான நிலையில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சுதந்திர தினத்தில் 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்து குஜராத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இத்தகைய செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உச்சநீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் விசாரித்த நீதிபதி உரிய அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top