வழிப்பறி கொள்ளையர் தாக்கியதில் மதுரையில் பெண் மரணம்- மனைவியை பார்க்க வந்த கணவரும் திடீர் மரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ஜோஸ்மின் ஜான்சி ராணி 53 வயதான இவர் கடந்த மாதம் தனது கணவர் தாமஸ் உடன் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது தோப்பூர் புறவழிச்சாலையில் இருவர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த ஜோஸ்மின் கழுத்தில் இருந்த செயினை இழுக்க முயன்றபோது அவர் தவறி கீழே விழுந்தார்.

இதில் ஜோஸ்மின் படுகாயமடைந்தார் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் மனைவியை பார்க்க பேருந்தில் வந்த கணவர் தாமஸ் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்ததில் இறந்தார்.

இந்த நிலையில் ஜோஸ்மின் ராணியும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment