Connect with us

நேருக்கு நேர் மோதி பைக்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

விபத்து

தமிழகம்

நேருக்கு நேர் மோதி பைக்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

மயிலாடுதுறையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய விபத்தை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் காளகஸ்திநாதபுரம் பிரதான சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்துக்குள்ளானது. அப்போது இரு சக்கர வாகனங்களை ஓட்டிய இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் பின்னார் வந்த கார் ஓட்டுநரின் சாதுரியமாக வாகனத்தை இயக்கியதால் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top