அதிர்ச்சி! நேருக்கு நேர் மோதிய பைக்… 2 பேர் பலி!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை அடுத்த பனையூர் பகுதியில் சைக்கிளிங்கிற்காக ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் வடலூரை சேர்ந்த சரண் என்பவர் வந்ததாக தெரிகிறது.

அப்போது சென்னையை சேர்ந்த ஒருவர் வரும்போது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மோதியுள்ளனர்.

தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் சைக்கிளிங்கிற்காக ஒருவழி சாலைகளாக மாற்றுவதால் இப்பகுதியில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் உள்ளிட்டோர் சாலையில் சென்று வருவதால் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என சாலையை முற்றுகையிட்டனர்.
இதன் காரணமாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.