சிக்கலில் TTF வாசன்? பெண் தோழியுடன் பைக் சாகசம்… நெட்டிசன்கள் கேள்வி!

சென்னையிலிருந்து திருத்தணி நெடுஞ்சாலையில் சென்ற டிடிஎப் வாசன் பைக்கிள் கட்டடிப்பது எப்படி என சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

யூடியூப் மூலம் பைக்கிள் சாகசங்களை செய்து அடிக்கடி போலீசாரிடம் சிக்குவதை வாடிக்கையாக கொண்டவர் டிடிஎப் வாசன். இவரது சாகசங்களுக்காகவே 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் குவிந்து உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது பெண் தோழியை சந்திக்க வந்திருந்த நிலையில் இருவரும் சென்னையில் இருந்து திருத்தணிக்கு பைக்கிலேயே பயணம் செய்தார். குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களை மீறி வழக்கம் போல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அதே சமயம் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறார். அதே பேகில் இருந்து பரிசு பொருட்களை தோழி கையில் அசால்ட்டாக எடுத்து கொடுத்திருக்கிறார். அப்போது கைக்கில் கட்டடிப்பது எப்படி என கேட்க இதோ காட்றன்… என கூறி இரு வாகனங்களுக்கு நடுவே சென்று செய்முறை விளக்கம் அளித்தார் டிடிஎப்.

இது போன்ற வீடியோக்கள் எடுத்து யூடியூப்பில் அப்லோடு செய்வதால் நிறைய பணம் கிடைக்கும் என அடுத்தவர்கள் உயிரோடு விளையாடும் டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் அண்மை காலமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 13 இளைஞர்களை கைது செய்த போலீசார் ஏன் வாசனை கைது செய்ய காலம் தாழ்கிறீகள்? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.