Connect with us

இருசக்கர வாகனங்கள் மோதல்-திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!!

கொலை

தமிழகம்

இருசக்கர வாகனங்கள் மோதல்-திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து!!

நம் தமிழகத்தில் தற்போது கத்திக்கூத்து என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.  எந்த பிரச்சினையை ஆனாலும் பலரும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குகின்றனர். அதிலும் இளைஞர்கள் கையில் கத்தி என்பது செல்போன் உபயோகிப்பது போல் மாறி உள்ளது.

இந்த நிலையில் திமுக பிரமுகர் ஒருவருக்கு கத்திக்குத்தினை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் இருசக்கர வாகனங்கள் மோதல் தொடர்பான தகராறில் திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த திமுக பிரமுகர் பிரவீன் குமார் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரவீன் குமாரை தாக்கியதாக விக்னேஷ், தினேஷ், குள்ள பாலாஜி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டு வருகிறது.

கத்திகுத்துக்கான காரணத்தை பற்றியும், ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top