பீகாரில் பயங்கரம்!! ரயில் எஞ்ஜினை திருடிய மர்ம கும்பல்!!

பீகார் மாநிலத்தில் ரயில் எஞ்சின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் அடுத்த பரௌஹ்னி பகுதியில் உள்ள க்ரஹாரா ரயில் நிலையத்தில் பழுது காரணமாக டீசல் எஞ்சின் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென எஞ்சின் காணாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லஞ்சம் வாங்கியதாக புகார்! பெண் அதிகாரி கைது!!

இதனையடுத்து உடனடியாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை கும்பல் ஒன்று எஞ்சின் பாகங்களை பீஸ் பீஸாக கழற்றி 13 சாக்குமூட்டையில் பார்சல் போட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த சுரங்கபாதை வழியாக சென்று காயலாங்கடை விற்பனை செய்து விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடைத்து போலீசார் அங்கு சென்று எஞ்சின் பாகங்களை கைப்பற்றினர்.

கோகுல்ராஜ் வழக்கு! மயங்கி விழுந்த சுவாதி… நீதிமன்றத்தில் பரபரப்பு!!

அதே சமயம் தப்பியோடிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீடி தேடி வருகின்றனர். மேலும், ரயில் எஞ்சின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.