பீகாரில் பரபரப்பு!! திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த பாலம்..!!

பீகாரில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்திய போதிலும் கள்ளச்சாராயம் குடித்து 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பெகுசாய் பகுதியில் உள்ள பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

சொத்துப்பட்டியல் வெளியிட நான் ரெடி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெத்தியடி பதில்!!

கடந்த 2016-ம் ஆண்டு கண்டக் ஆற்றில் சுமார் 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி செலவில் கட்டப்பட்டு பின்னர் 2017-ல் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. இந்த சூழலில் போக்குவரத்து வசதிகள் இன்னும் துவங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் எவ்வித நடிவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் பாலத்தின் முன்பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை என அம்மாநில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.