அரசை கண்டித்து போராட்டம் – ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி..!!

பீகார் அரசியலை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆசியர் தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்களுக்கு மாநிலத்தில் பணியிடங்கள் நிரப்ப வில்லை எனவும், இதன் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கர்நாடகாவில் அதிர்ச்சி!! தந்தையை கொன்று 30 துண்டுகளாக வெட்டி வீசிய மகன்..!!!

இந்நிலையில் சுமார் 3 மணி நேரமாக போராட்டமானது அமைதியாக முறையில் நீடித்தாக கூறப்படுகிறது. அதே சமயம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இதனிடையே போராட்டத்தினை கலைக்க போலீசார் முயன்றனர்.

அப்போது போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுப்பட்டனர். இருவருக்கும் வாய்தகறாறு ஏற்படவே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் போலீசார் மற்றும் ஆசிரியர்கள் மீது கைகலப்பு ஏற்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு: இபிஎஸ்-க்கு அழைப்பு..!!

இந்த சூழலில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடித்தினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.