Connect with us

உச்சகட்ட பரபரப்பு..!!! பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா..!!!

nitish kumar 01 1509519339 1579940210

செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு..!!! பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா..!!!

கடந்த 2020-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பாஜக – ஐக்கிய கனதா தளம் வெற்றி பெற்று நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட்டணியின் தர்மத்தின் அடிப்படையில் நிதிஷ்குமார் முதல்வரானார்.

இருப்பினும் ஆட்சி அதிகாரத்தை பொருத்தவரையில் பாஜக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய செயலானது ஐக்கிய கனதா தளம் கட்சித் தொண்டர்களிடையே மனவேதனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அவ்வப்போது இரு கூட்டணிகளும் கருத்து வேறுபாடு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இரு கூட்டணிகளும் கருத்து வேறுபாடு என்பது உச்சகட்டத்தை எட்டி இருந்தது.

இதுபோன்ற சூழலில் பாஜகவிலிருந்து ஐக்கிய கனதா தளம் கட்சி விலக முடிவெடுத்தது. அதன் படி, இன்று காலை நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தில் பாஜக உடன் இருந்த உறவு முறிந்து விட்டதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக பீகார் மாநில ஆளுநரிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்பிறகு காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top