தற்போது கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 8 வாரங்கள் தான் இருந்தது. ஆனால் ரசிகர்களின் வரவேற்பால் கூடுதலாக இரண்டு வாரங்கள் சேர்க்கப்பட்டதாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சில முக்கிய பிரபலங்கள் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்துள்ளனர். அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்தார். இவ்வாறு உள்ளநிலையில் ஜூலி தனது பங்கிற்கு தன் வழக்கம்போல செய்ய தொடங்கிவிட்டார் போல காணப்படுகிறது.
ஏனென்றால் ஜூலியும் சதீஷும் ஒரு அணியாக உள்ளனர். ஜூலி சதீஷிடம் அவரது குறையை பற்றி கூறினார், அதை ஏற்க மறுத்தார். இதனால் ஜூலி பாலாஜி முருகதாசிடம் சதீஷ் பற்றி பேசுவது போல காணப்படுகிறது .எனவே சதீஷ் இதைக்கேட்டு பொங்குகிறாரா? இல்லை எவ்வாறு இருக்கும் என்பதை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.