பிக்பாஸ் அல்டிமேட்: கிராமத்தில் இருந்த தருணங்களை பகிர்ந்து கொள்ளும் ஹவுஸ் மேட்ஸ்!!

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அனைவரும் கிராமத்து மக்களைப் போல் வேடம் அணிந்துள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் அங்குள்ள போட்டியாளர்களுக்கு ஒரு பகிர்ந்து கொள்ளும் இதமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது.

அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் புதிதாக களமிறங்கியுள்ள சதீஷ் மற்ற போட்டியாளர்கள் முன்பு வாசிக்கிறார். அப்போது அவர் நீங்கள் கிராமத்திலிருந்த அனுபவங்கள் ஏதேனும் ஒன்றை பற்றி எங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் தருணம் இது என்று பிக்பாஸ் கூறியதாக அவர் சொல்லுகிறார்.

அப்போது பேசிய ஜூலி, எனது அம்மா இருந்த ஊரில் கழிப்பறை வசதிகளை இல்லை என்று அவர் சோகமாக கூறினார். அதன்பின்னர் அபிராமி பேசும்போது கன்னியாகுமரி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம் அங்கு வேட்டை என்பது நடக்கும் என்று கூறுகிறார்.

பின்னர் தாமரை தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பேசும்போது நாங்கள் கிராமத்தில் இருக்கும் போது சிறுவர்கள் ஒன்றாக கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம் என்று கூறினார். சுருதியும் தனது பங்கிற்கு கிராமத்தில் இருந்த தருணங்களை பேசினார்.

அப்போது அவர் கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி வைப்பார்கள் என்று கூறினார். இதில் கவிஞர் சினேகன் எழுந்து நின்று பேசும்போது சனி ஞாயிற்றுக்கிழமைகள் ஆடு மேய்க்கப் போவோம் அங்கு கிடைக்கும் மீனை சுட்டு தின்போம். அங்கு கிடைக்கும் சுவையே தனி சுவை என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment