விஜய் டிவியை பொருத்த வரையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அதி பிக்பாஸ் என்றே கூறலாம். அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிழச்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ல் ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், அசல் கோலார், ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முக்கிய பங்காற்றி வந்தனர்.
அதே சமயம் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் படி, கடந்த வாரம் இலங்கை மாடலான ஜனனி வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களிடையே கடும் மோதல்கள் நிலவியுள்ள்ளது. இதனால் வீட்டில் முக்கிய போட்டியாளர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்த நாளில் இருந்தே மிகவும் வில்லத்தனமாகவும், ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி எலிமினேட் செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் உன்மைத்தன்மையை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.