Entertainment
சத்திய சோதனைக்காக ‘ராஜபாளையம்’ தமிழ் பேசிய பிக்பாஸ் நடிகை

நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் ’சத்திய சோதனை’ என்ற வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா மற்றும் ஆட்டோ சங்கர் சீரியலில் நடித்த சுவாயம் சித்தா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில நாட்களாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் காமெடியுடன் கூடிய ஒரு சமூக கருத்தை தெரிவிக்கும் படமாக இருக்கும் என்று ஏற்கனவே இயக்குனர் சுரேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் அதில் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை இன்று முதல் தொடங்கி தான் டப்பிங் பேசியதாகவும் நடிகை ரேஷ்மா தெரிவித்துள்ளார்
மேலும் இந்த படத்தில் தான் ராஜபாளையம் தமிழில் பேசியது புதுவித அனுபவமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
