Connect with us

விரைவில் வெளியாகிறது பிக்பாஸ் கொண்டாட்டம்… கலைகட்டும் பிரபல தொலைக்காட்சி

Entertainment

விரைவில் வெளியாகிறது பிக்பாஸ் கொண்டாட்டம்… கலைகட்டும் பிரபல தொலைக்காட்சி

d47addab1f61cb437de9c4b82893875e

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. 

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ்.

இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு. எனவே அடுத்ததாக ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதிலும் அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 1:30 மணிக்கு   ஒளிபரப்பாக இருக்கிறது.  இந்த புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top