பிக்பாஸ்: தாமரையின் வெற்றிப்பயணம் அவ்வளவுதானா? இந்த வாரம் எவிக்ட் ஆகிறாரா?

இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக பிரம்மாண்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. தற்போது வரை பிக்பாஸ் 5ல், 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதன்படி ராஜு, பிரியங்கா, பாவணி, தாமரை, நிரூப் ஆகிய ஐந்து பேர்தான். இவர்களுடன் சிபி என்ற சக போட்டியாளரும் இருந்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 12 லட்சம் பணம் பெட்டியோடு சிபி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய பிக் பாஸ் மேடையில் சிபி வந்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாரேனும் ஒருவருக்கு மட்டும்தான் பிக்பாஸ் டைட்டில் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி கொண்டு வருகிறது.

இந்த வாரம் எவிக்ட் யார் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே நிலவுகிறது. இதன் மத்தியில் தாமரை வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. ஐவர்களில் தாமரைக்கு மட்டுமே குறைவான வாக்கு பதிவாகியுள்ளது.

தாமரையின் விளையாட்டை பலரும் நல்ல விதமாகவே கூறி வந்த நிலையிலும் அவருக்கு வாக்குகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் நடக்கின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை வெளியேறுவாரா? இல்லை இறுதிக்கு செல்வாரா? என்பது பொருத்திருந்து தான் உறுதி செய்யப்படும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment