ரம்யா பாண்டியன் நடுவராக இருக்க, ‘இவங்க இப்படித்தான்’ டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்..!!

தற்போது ஓடிக் கொண்டிருக்கின்ற பிக்பாஸ் அல்டிமேட் தினந்தோறும் புதுப்புது சுவாரசியமான போட்டிகளை வைத்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி களாக உள்ளே வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். வந்த முதல் நாளே அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் ஒரு போட்டியை வைத்துள்ளார். அதன்படி ரம்யா பாண்டியன்  நடுவராக அமர்ந்திருக்க இவர்கள் இப்படித்தான் என்ற போட்டியினை பிக்பாஸ் அல்டிமேட் கொடுத்தார்.

அதன்படி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டு பேரு அணிகளாக காணப்படுகின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே புரிதல் உணர்வு பற்றி தான் இந்த போட்டி அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒரு மரப்பலகையின் இடது, வலது புறத்தில் அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்பாக போட்டியாளர்களின் உருவம் கொண்ட அட்டை வைக்கப்பட்டுள்ளது.

அப்போது ரம்யா பாண்டியன் ஒவ்வொரு கேள்வியினை கேட்க அவர்கள் அந்தக் கேள்விக்கு பதிலாக அங்குள்ள போட்டியாளர்களின் புகைப்படத்தை எடுத்து காண்பிக்கிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.