76 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமிக்கு இவ்வளவு சம்பளமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 76 நாட்கள் இருந்து கடந்த வாரம் எலிமினேஷன் ஆன தனலட்சுமிக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது.

big boss-dhanalakshmi இந்த நிலையில் கடந்த வாரம் தனலட்சுமி குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கான சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தினமும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என தனலட்சுமிக்கு பேசப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் எழுபத்தி ஆறு நாட்கள் இருந்ததை அடுத்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி இருந்திருந்தால் லட்சக்கணக்கில் பண பெட்டி கிடைத்து இருக்கும் என்பதும் அந்த வாய்ப்பை அவர் மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகியுள்ளதால் தனலட்சுமிக்கு விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...