Connect with us

நானும் கணேஷூம் அண்ணன் – தங்கை: ஆர்த்தி கூறிய அதிர்ச்சி தகவல்

Entertainment

நானும் கணேஷூம் அண்ணன் – தங்கை: ஆர்த்தி கூறிய அதிர்ச்சி தகவல்

bd586955c77af3b77143264d28198aff

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்த்தி, காமெடி நடிகர் கணேஷின் மனைவி என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இருவருமே குழந்தை நட்சத்திரங்கள் என்பதும், குழந்தையின் முதல் நடித்து வருகிறார்கள் என்பதும் ஒரு கூடுதல் தகவலாகும்

இந்த நிலையில் பிக் பாஸ் ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பழைய திரைப்படம் ஒன்றில் நடிகை அம்பிகாவுடன் குழந்தை நட்சத்திரமாக உள்ளது தான் என்றும், தனக்கு அருகில் இருக்கும் சிறுவன் கணேஷ் என்றும், அந்த சிறுவன்தான் தற்போது தனது கணவராக இருக்கும் கணேஷ் என்றும், அந்த திரைப்படத்தில் தாங்கள் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் அந்த படம் எந்த திரைப்படம் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அண்ணன் தங்கையாக நடித்த ஆர்த்தி மட்டும் கணேஷ் தற்போது கணவன் மனைவியாக இருப்பதை நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top