Entertainment
ரொம்ப ஓவராத்தான் போறாங்க பிக் பாஸ் வனிதா!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் மட்டும் எந்தவிதமான பிரச்சினையில்லாமல், சென்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரையும் அபிராமி, ஷெரின், வனிதா, சாக்ஷி டார்க்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில், தர்ஷன், சரவணன், சாண்டி, லோஸ்லியா, ஃபாத்திமா ஆகியோர் மட்டுமே எந்த டார்க்கெட்டிலும் சிக்கவில்லை.
இந்த நிலையில், முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் கவின், சாக்ஷி, மதுமிதா, மீரா மிதுன், சரவணன், சேரன், ஃபாத்திமா பாபு ஆகிய 7 பேரது பெயர் பட்டியலில் இடம்பெற்றது.
இதில், மீரா மிதுன் மட்டுமே அதிக வாக்குகள் பெற்று எலிமினேஷனில் முதலில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மதுமிதா இருக்கிறார். இந்த நிலையில், இந்த வாரம் ஃபாத்திமா பாபு வெளியேறுவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இன்றைய புரோமோவில் கமல் ஹாசன், உண்மை முகங்களை காட்டச் சொன்னோம். அதுக்காக இப்படியா காட்டு காட்டுனு காட்டுத்தனமா காட்டீட்டீங்க. உள்ளே 7 பேரை நாமினேட் செய்து வச்சுருக்கீங்க. சரி, அவங்க தான் அப்படின்னா…நீங்க…10 கோடி ஓட்டுகள் போட்டு உங்க முகத்த காட்டிருக்கீங்க..சாரி உங்க பவர காட்டிருக்கீங்க. உங்கள் முதல் தீர்ப்பு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு புரோமோவில் யார் வெளியேறுவதை அதிகமாக விரும்புகிறீர்கள் என்று கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார். பெரும்பாலும், போட்டியாளர்கள் அனைவருமே மதுமிதாவிற்கு வாக்களித்துள்ளனர். இதில், வனிதா கொஞ்சம் ஓவராக எல்லோருக்கும் சேர்த்து நானே வாக்களிக்கிறேன் என்று அனைவரது சார்பில் மதுமிதா பெயரை குறிப்பிட்டுள்ளார்.
இதனையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுமிதா சோகத்தில் அழுதார். வனிதா எப்பவும் கொஞ்சம் ஓவராத்தான் போவாங்க, இதுல மட்டும் என்ன விதிவிலக்கா என்கின்றனர் ரசிகர்கள்.
