பிக் பாஸ் 5: டபுள் எவிக்‌ஷன்! பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அக்‌ஷரா மற்றும் வருண் வெளியேற்றம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து செண்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை இப்போதுதான் டாப் 10 என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதனை இந்த வாரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Akshara

பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் அக்‌ஷரா, வருண், பாவனி, பிரியங்கா, சிபி மற்றும் நிரூப். குறைவான வாக்குகள் பெற்று அக்‌ஷரா வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது வருணும் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Varun - Akshara

அக்‌ஷரா மற்றும் வருண் வெளியேற்றத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ஆக குறைந்துள்ளது.

இந்த டபுள் எவிக்‌ஷனுக்கு போட்டியாளர்களின் ரியாக்‌ஷன் என்ன என்பது இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.