Entertainment
லாஸ்லியா விஷயத்தில் பாரபட்சம் பார்க்கும் பிக் பாஸ்!!
விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பெரிதளவில் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, மிகப் பெரிய தவறுகளைவிட்டு விட்டு சப்ப மேட்டர் பத்தி பேசிட்டு போற மாதிரி இருக்கு.

ஒரு பெண்ணை தற்கொலை செய்ய தூண்டியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதற்கு நேர்மாறாக மதுமிதாவை வெளியேற்றியது தவறான விஷயமாகும்.
முகேன் அபிராமி விஷயத்தில் அபிராமியை துருவித் துருவி கேள்வி கேட்ட பிக் பாஸ் லோஸ்லியாவிடம் கேள்வி கேட்பாரா? என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை.
கவினும் லாஸ்லியாவும் விடிய விடிய பேசிக் கொண்டும், எனக்கு பிடிக்கும் என்றும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டும் அவர்களின் காதலை உறுதிப்படுத்துகின்றனர்.
கேட்க ஆள் இல்லாததால், இவர்கள் போடும் ஆட்டம் அதிகமாகிய வண்ணமே உள்ளது. கேட்க நினைப்பவர்களும் லோஸ்லியா மதிக்காமல் பேசுவார் என்பதால் சற்று விலகியே உள்ளனர்.
சாக்ஷி- கவின்-லாஸ்லியா முக்கோணக் காதலில் லாஸ்லியாவிற்கு சப்போர்ட் கிடைத்த அளவு சாக்ஷிக்கு ஏன் கிடைக்கவில்லை? அவர் வெளியேறியதற்குக் காரணமே இவர்களுடைய நடவடிக்கைகள்தான் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
