பிக்பாஸ் டைட்டில் வின்னரில் திடீர் திருப்பம்.. அப்ப விக்ரமன் டைட்டில் வின்னர் இல்லையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் வரும் ஞாயிறு அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு விக்ரமன், அசீம், ஷிவின், மைனா அமுதவாணன் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தகுதி பெற்ற நிலையில் அமுதவாணன் 11.75 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இந்த நிலையில் மீதமுள்ள நான்கு போட்டியாளர்களில் ஒருவர்தான் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்து நிலையில் திடீர் திருப்பமாக இறுதி போட்டிக்கு முன்பே ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்தார். அந்த போட்டியாளர் மைனா என தற்போது தெரியவந்துள்ளது.

azeem 23இதனை அடுத்து அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று அறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி, அசீம் தான் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பார்வையாளர்களிடம் அதிகப்படியான திட்டு வாங்கியவர் அசீம் தான் என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி கமல்ஹாசன் ஓரிருமுறை கண்டிக்கவும் சில முறை எச்சரிக்கவும் செய்தார் என்றும் அவரை ரெட் கார்டு கொடுத்து கூட அனுப்ப வெளியே அனுப்பலாம் என்று கூட கூறப்பட்டது.

vikraman cry

ஆனால் அடுத்தடுத்து அசீமுக்கு கிடைத்து வந்த ஆதரவு காரணமாக இறுதி போட்டியில் அவருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்ரமன் தான் கிட்டத்தட்ட பிக் பாஸ் டைட்டில் வின்னர் என 50 நாட்களுக்கு முன்பே கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் ஏற்பட்ட ஒரு திருப்பம் தான் விக்ரமனுக்கு நெகட்டிவ் ஆக அமைந்தது என்று கூறப்படுகிறது. அது என்ன திருப்பம் என்பது பார்வையாளர்களின் ஊகத்திற்கே விட்டுவிடலாம்.

இந்த நிலையில் அசீம் டைட்டில் வின்னர் என்றும் இரண்டாவது இடம் விக்ரமனுக்கு என்றும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு என்றும் கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை வரை ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

shivin

மொத்தத்தில் ஒவ்வொரு வருடமும் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் தான் டைட்டில் வின்னர் பட்டம் பெற்று வருகிறார்கள் என்பது கூறப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான ராஜூ தான் கடந்த ஆண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார். அந்த வகையில் இந்த சீசனிலும் விஜய் டிவியை சேர்ந்த அசீம் தான் டைட்டில் வின்னர் எனக் கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.