உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் இந்த சீசனில் சாதாரண சாமானிய மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சி அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் வாரத்தில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.
தற்போது இந்த நிகழ்ச்சி புதிய சீசனின் லோகோ குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட வைத்துள்ளது. மிகவும் வித்யாசமான முறையில் பிக் பாஸ் சீசன் 6ன் லோகோ உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரியாலிட்டி ஷோவில் ‘குக் வித் கோமாளி 3’ புகழ் வி.ஜே.ரக்க்ஷன் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் பல விஜய் டிவி பிரபலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.
உதட்டை குளோஸாக படமெடுத்த நயன்தாரா! விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!