Entertainment
டிஆர்பியை அதிகரிக்க பிக் பாஸ் செய்த வேலை!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில் பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும்.
பெரும்பாலான போட்டியாளர்கள் தங்களுடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல் கூட்டத்தில் ஒருத்தராகவோ அல்லது வந்த வேலையினை மறந்தவராகவோ இருக்கிறார்கள் என கமல் ஹாசன் தெரிவித்தார்.

இதனைப் பேசும் பொருட்டு ஹவுஸ்மேட்ஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைக்கப்பட்டு, அவர்களிடம் கமல் ஹாசன் பேசினார்.
இது ஒரு தனிப்பட்ட நபருக்கான போட்டியாகும், குழுவோடு சேர்ந்து ஜெயிக்க முடியாது, ஒவ்வொருவரும் அவரவர் வெற்றிக்காக முயற்சி செய்யுங்கள்.
உள்ளே நுழைந்த காரணத்தினை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என்று கூறியதோடு, இது பாசத்திற்காகவோ அல்லது காதலுக்காகவோ விட்டுக் கொடுக்க வேண்டிய போட்டியல்ல என்று அறிவுறுத்தினார்.
இது ஹவுஸ்மேட்ஸ் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை. ஆனால் இதன்மூலம் இனி கேங்க் பார்ம் ஆவது குறையும், இவர்களுக்குள் போட்டி அதிகரிக்கும், இதனால் பிரச்சினைகள் உருவாகி சண்டை, சச்சரவு அதிகரிக்கும். நிச்சயம் டி ஆர்பியும் கூடவே அதிகரிக்கும் என்று கூறினார்.
