ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாரா பிக்பாஸ்? முதல் நாளே நாமினேஷனா…..!
நேற்றைய தினம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் அளிக்கின்ற திருவிழாவாக காணப்படுகிறது. ஏனென்றால் பிக் பாஸ் சீசன் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் இன்னும் அடுத்த ஆண்டுதான் பிக்பாஸ் நமக்கு பார்க்கக் கிடைக்கும் என்று சோகத்தில் மூழ்கிய நிலையில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேற்றைய தினம் தொடங்கியது. இதில் தொகுப்பாளராக கடந்த ஐந்து சீசன்கள் இல் உள்ள உலக நாயகன் கமலஹாசனின் இருக்கிறார். இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் கடந்த ஐந்து இடங்களில் போட்டியிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் தான் பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கிய நிலையில் அடுத்த நாளே பிக்பாஸ் நாமினேஷன் அறிவித்துள்ளது. இதில் மூன்றாவது சீஸனில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட வனிதா பிக்பாஸ் 4 வது சீசனில் விளையாடிய அனிதாவை நாமினேட் செய்துள்ளார். அதேபோல் வனிதாவிற்கு பாலாஜி போன்ற பலரும் நாமினேட் செய்கின்றனர். தற்போது நாமினேசன் ப்ரோமோ வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
