தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கினார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்டு பிரபலமான ரைசா வில்சனுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்துள்ளார்.
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
இது இசையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கசட தபற’ திரைப்படத்தை தொடர்ந்து ஸ்டார், நூறு கோடி வானவில் போன்ற படங்களையும் தற்போது புதிதாக மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
அடி தூள்!! வசூலில் மாஸ் காட்டும் PS-1: எத்தனை கோடி தெரியுமா..?
இந்நிலையில் திருமண நிச்சயதார்த்தம் குறித்து ஹரிஷ் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் அவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.