பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேரப்போவது யார் தெரியுமா?

ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் கடந்த வாரம் வெளியேறப்போவதாக அறிவித்தார்.

இதனிடையே இந்த வாரம் யார் தொகுப்பாளராக வரப்போவது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துவந்தது. அந்த வகையில் இந்த வாரம் சிம்புதான் வருவார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான நிலையில் அதற்கான புரோமோவும் வெளியானது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்த   சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருந்த நிலையில் சுஜா வருணி , அபிநய் மற்றும் சாரிக் ஆகியோர்  வெளியேறி இருந்தனர்.

தற்போது இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற  கேள்வி  ரசிகர்களிடம்  இருந்து வருகிறது. ஓட்டிங் விவரப்படி தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி ஆகியோர் ஒரே லெவலில் உள்ளார்கள். இவர்கள் 3 பேரில் யாராவது ஒருவர் வெளியேறுவது நிச்சயம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment