பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகிறது என்றும் இருப்பினும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்பட்டு வந்தது
இந்த நிலையில் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்பட்டது
இதனை உறுதி செய்வது போல் இது குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அட்டகாசமான தோற்றத்தில் உள்ளார் என்பதும் இதுவரை இல்லாத அளவில் அவர் கம்பீரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.