பிக் பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் லோகோ அறிமுகம் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முதல் புரோமோ விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் கலகலப்பும் இறுதியில் சண்டையும் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன
அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்தாலும் போகப்போக சண்டை வரும் என்பதை கமல்ஹாசன் தெரிவிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளன இந்த வீடியோ வெளியானதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி களை கட்டத் தொடங்கி விட்டது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கனி, சுனிதா, தர்ஷா, மிளா, வடிவுக்கரசி, ஜிபி முத்து, வினோத், மைனா, உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. ???? #BiggBossTamil Season 5 | விரைவில்.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் @vijaytelevision pic.twitter.com/1uMSs72Z25
— Kamal Haasan (@ikamalhaasan) September 3, 2021