உணர்ச்சி மழையில் நனைத்த பிக்பாஸ்-கண்கலங்கிய அமீர், ராஜு; குஷியில் பிரியங்கா!

கோலாகலமாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது பிக் பாஸ் சீசன் 5. பிக் பாஸ் சீசன் 5 என்பதற்கு ஏற்றபடி இறுதி போட்டியாளர்களாக ஐந்து பேர்கள் உள்ளனர். அதன்படி ராஜு, நிரூப், அமீர், பிரியங்கா மற்றும் பாவணி இவர்கள்தான் இந்த பிக் பாஸ் சீசன் 5 இறுதிகட்ட போட்டியாளர்கள்.

இந்த நிலையில் நாளைய தினத்தோடு பிக்பாஸ் சீசன் 5 முடிந்து விடும் இது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.

இந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டி பிக்பாஸில் சில நாட்களாக உணர்ச்சிகரமான நிகழ்வுகளை நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இன்றைய தினம் வெளியான புரோமோவில் ஸ்டார் வடிவ மேடையில் ஒவ்வொரு பிக்பாஸ் போட்டியாளரும் வந்து நின்று தாங்கள் கடந்து வந்த பாதையை குறித்த வீடியோ திரையில் வெளிப்படுத்தப்படுகிறது.

அதில் ராஜு மற்றும் அமீர் ஆகியோர் கலங்குகின்றன. அதில் நிரூப் வின் பண்ண வேண்டியது அவர்கள் திறமை, ஓட வேண்டியது என் கடமை என்று கூறியுள்ளார். இதுபோன்ற ஒவ்வொருவரும் வந்து நிற்க உணர்ச்சி மழையில் ஒவ்வொருவரும் நனைந்தனர் என்பது புரோமோவை பார்க்கும் போதே தெரிகிறது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/U51KLZ-S-V4″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment