பிக்பாஸ் ரன்னர் பாலாஜியின் முதல் வீடியோ!

f42512f321b05cb9d32f5b1ab942b7e5

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டாலும் ஆரியுடன் அடிக்கடி மோதிய ஒருவராக கருதப்பட்டாலும் தன்னுடைய தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் பாலாஜி முருகதாஸ்

இவர் விளையாடிய விதம் வித்தியாசமானது என்றும் இதுவரை எந்த போட்டியாளரும் இவரது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடவில்லை என்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது 
எனவே தான் பாலாஜி முருகதாஸ் மீது சர்ச்சைக்குரிய வகையில் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரை ரன்னராக பொதுமக்கள் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

f4e5964ec50c59935c06154f42037782

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி முதல் முறையாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்/ தனது டுவிட்டரில் அவர் செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

உங்கள் அன்புக்கும், எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. நீங்க இல்லை என்றால் நான் இல்லை. லைவ்வில் என்னால் வர முடியவில்லை. அதனால் இந்த வீடியோ சிறிய வீடியோவை வைத்துக்கொள்ளுங்கள். லவ் யூ’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.