எலியும் பூனையுமாக இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கட்டி அணைத்து அன்பு பகிர்வு! ஒருவேளை வாக்கு சேகரிப்புக்கான உட்டாலக்கடி வேலையோ?

தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிறைவை ஒட்டி உள்ளது. இதனால் தினம் தோறும் பல்வேறு விதமான என்டர்டைன்மென்ட் டாஸ்க்களே போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பின் பரிசு என்ற டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

இதனை போட்டியாளர் அமீர் சக பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்பு படிக்க தொடங்கினார். அதன் பின்னர் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் பரிசுகளை வழங்கி கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர் நிருப்  சக போட்டியாளராக பிரியங்காவிற்கு தனது தாய் கழட்ட வேண்டாம் என்று கொடுத்து இருந்த செயினை கழற்றி கொடுத்து அன்பை பகிர்ந்துள்ளார்.

இதனால் ஆனந்தக் கண்ணீரோடு கட்டியணைத்துள்ளார் பிரியங்கா. இதற்கு முன்பு வரை நிருப்பிற்கும் பிரியங்காவிற்கும் இடையே தினம்தோறும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறும்.

இந்த சூழலில் பிக்பாஸ்  கடைசி நேரத்தில் இவ்வாறு நெருங்கிய நண்பர்களாக காணப்படுவது ஒரு வேளை வாக்கு சேகரிப்புக்காக செய்யும் உட்டாலக்கடி வேலையோ என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment