பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஒருவர்: மீதி உள்ள நால்வரில் வின்னர் யார்?

e639e11d250d0cea18c81e5f2ae79bb2

பிக்பாஸ் ஃபினாலே தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆரி, பாலாஜி, ரம்யா, சோம் மற்றும் ரியோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஐவரில் ஒருவர் இப்போது வெளியேற வேண்டும் என்று கமலஹாசன் கூற, முன்னால் டைட்டில் வின்னர் முகின் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் 

முகின் போட்டியாளர்களுக்கு ஒரு சில டாஸ்குகளை வைக்கிறார். கடைசியாக ஸ்கேன் செய்யும் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த அட்டைகளை ஸ்கேன் செய்ய கடைசியாக சோம்சேகர் எவிக்ட் என்று ஸ்கேனில் வந்ததை அடுத்து முகினுடன் அவர் வெளியேறுகிறார்

6133f12f7bf496872c83b795e89590bf

சோம் வெளியேறும்போது அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுக்கொண்டு சிரித்த முகத்துடன் வெளியேறினார் என்பதும் இறுதிப்போட்டி தினத்தன்று வெளியேறுகிறோம் என்ற வருத்தம் சிறிதளவும் அவரது முகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க வந்திருந்த சோம் குடும்பத்தினர் மிகுந்த வருத்தம் அடைந்து இருப்பது அவர்களுடைய முகத்தில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆரி, பாலாஜி, ரம்யா மற்றும் ரியோ ஆகிய நால்வரில் ஒருவர் தான் வின்னர் என்பது உறுதியாகிறது. அது மட்டுமின்றி இன்னும் சில மணி சில நிமிடங்களில் மேலும் ஒருவர் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.