பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறுவது இந்த சிங்கப்பெண்ணா?

9707d3e076fb4c4a2074c76f1f4abd81

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்? என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது

இந்த வாரம் தான் கடைசி வாரம் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆரி மிக அதிகமான வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அதாவது பதிவான மொத்த வாக்குகளில் 40 சதவீத வாக்குகளை அவர் பெற்று உள்ளதால் அவர் இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்று விட்டார் என்றே கூறலாம் 

95114c68a96230a270dd2975d0540f63

இதனையடுத்து பாலாஜி ரியோ கேபி ஆகிய மூவரும் அடுத்தடுத்து அதிக வாக்குகள் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது. நேற்றைய நிலவரப்படி குறைந்த வாக்குகள் பெற்றவர் ஷிவானி மற்றும் ரம்யா என்றும், தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த வாரம் வெளியேறுவது ஷிவானி என்றும் கூறப்படுகிறது 

நேற்றைய டாஸ்க்கின்போது சிங்கப்பெண் என்று பிக்பாஸால் புகழப்பட்ட ஷிவானி இந்த வாரம் வெளியேற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆரம்பம் முதல் மெதுவாக விளையாடினாலும் கடைசி நேரத்தில் தன்னுடைய திறமையை காண்பித்து நல்ல பெயரை எடுத்து கொண்டிருந்த நிலையில் அவர் வெளியேறுகிறார் என்றும் இருப்பினும் இந்த பிக்பாஸ் வீட்டில் ஷிவானி யாரிடமும் கெட்ட பெயர் வாங்கவில்லை என்பதே அவரது பிளஸ் என்றும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.