எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் கவர்ச்சி நடிகை!

81ab9e07926aaf0a73c89b04593a19d1-1

தமிழ் திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா என்பதும் இவர் தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் வெங்கட்ராகவன் என்பவர் இயக்கும் இந்த படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது 

4b25ada6a996ea6126ab4e8bb31bb89f-2

இந்த நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து டிரண்டை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

முதல் முறையாக எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் ஜோடி சேரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பலர் திரையுலகில் ஜொலித்த வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் யாஷிகாவுக்கு திருப்பம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.