பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேல் நடந்த நிலையில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் கடந்த 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்த போட்டியாளர்களின் மகிழ்ச்சியான தருணம் மற்றும் அழுகையான செண்டிமெண்ட் தருணங்கள் குறித்த குறும்படங்களை கடந்த சமீபத்தில் பிக்பாஸ் போட்டுக் காட்டினார் என்பதும் இவை இரண்டுமே நெகிழ்ச்சி அடையும்படி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டை காட்சிகள் குறித்த குறும்படத்தை பிக்பாஸ் போட்டு காண்பித்தார். இந்த காட்சியில் போட்டியாளர்கள் அனைவருமே மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் இருந்தன
குறிப்பாக ஆரி கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களுடனும் சண்டை போட்ட காட்சியும் பாலாஜியிடம் கொஞ்சம் அதிகமான சண்டை போட்ட காட்சிகளும் இருந்தன. பாலாஜி பலமுறை ஆரியிடம் சண்டை போட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்ட நிலையில் இந்த சண்டைக் காட்சிகளை அவருடைய பக்கத்தில் உட்கார்ந்து அவர் பார்த்து ரசித்தார் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயமாகும்
இந்த சண்டைக் காட்சிகள் எடிட் செய்யப்பட்ட விதம் சூப்பராக இருந்ததால் இந்த குறும்படத்தை பார்ப்பதற்கு போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது