வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபல நடிகை: யாருன்னு தெரியுமா ?
ஹாட்ஸ்டார் இல் வெற்றிகரமாக 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட வேலைகளுக்காக விலகுவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இதற்கிடையில் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபல நடிகை பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை லாஸ்லியா மரியநேசன் வைல்ட் கார்டு எண்ட்ரி வழியாக செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா நடித்துள்ளார்.
தற்போது அவருக்கு படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
