பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் நடிக்கயிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படத்தின் தமிழ் ரீமேக் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாகவும் அவருடன் கேஎஸ் ரவிக்குமார் யோகி பாபு உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது
இந்த படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இயக்க இருப்பதாகவும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் ரீமேக்கில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியகி இருப்பது தமிழ் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது