சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்….! யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ அதைவிட அதில் பங்கேற்கும் நபர்கள் தான் அதிக பிரபலமாக உள்ளார்கள். அதற்கு காரணம் மீம் கிரியேட்டர்கள் தான். போட்டியாளர்கள் செய்யும் செயலை மீம்கள் மூலம் தெறிக்க விட்டு அவர்களை வேற லெவல் டிரண்ட் செய்து விடுகிறார்கள்.

அனிதா சம்பத்

அந்த வகையில் கடந்த சீசனில் மிகவும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவருக்காகவே செய்தி பார்க்கும் அளவிற்கு ரசிகர்களை வைத்திருந்த அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரின் இமேஜை அவரே டேட்டால் டேமேஜ் செய்து கொண்டார்.

சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் அனிதாவை டிரோல் செய்து மீம்கள் பறந்தன. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அனிதா வெளியே வந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து அசத்தலாக நடனமாடி டைட்டிலையும் தட்டி சென்றார்.

இதனை தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த அனிதா சம்பத்திற்கு நடிகர் விமல் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக அனிதா சம்பத் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் அனிதா சம்பத் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் அனிதா சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிதா சம்பத் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment