Connect with us

திருமணத்துக்கு தயாராகிய பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண்.. எப்போ கல்யாணம்னு தெரியுமா?

15d5f5f9cb424a52b1372753edccbfd259158

பொழுதுபோக்கு

திருமணத்துக்கு தயாராகிய பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண்.. எப்போ கல்யாணம்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கினார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்டு பிரபலமான ரைசா வில்சனுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்துள்ளார்.

relationshiptipsfromthemoviepyarpremakadhal1 1534569942

இது இசையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கசட தபற’ திரைப்படத்தை தொடர்ந்து ஸ்டார், நூறு கோடி வானவில் போன்ற படங்களையும் தற்போது புதிதாக மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அடித்ததாக நெஞ்சுக்கு நீதி, கானா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் தமிழரசன் படத்தில் ஹரீஸ் கல்யாண் நடிக்கஉள்ளார். ஹரிஷ் கல்யாணை வைத்து தமிழரசன் பச்சமுத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படத்தையே உருவாக்குவார் என கோலிவுட்டில் படத்தை குறித்து பரவளாக பேசி கொண்டிருக்கின்றனர்.

MV5BNTczNDA3ODAtZjFhYy00ZWJkLWFmNjEtMDcwMzUwMDdjZTcyXkEyXkFqcGdeQXVyMzYxOTQ3MDg@. V1 1

இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகின்றன. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹரிஷ் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ அவரின் திருமணம் நடைபெறலாம்.

harish kalyan in nooru kodi vaanavil movie first single kannaatti lyric video 1647003442

ஹரிஷின் மனைவி யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக சசியின் இயக்கத்தில் ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்துள்ளார்.

2022 ஆண்டு கூகுள் தேடல் பட்டியல் : விஜய்க்கு எந்த இடம் தெரியுமா?

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top